#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
இந்த சீசனில் விடிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம், சுஜிதா, பிரியங்கா, சின்னத்திரை நடிகர் அக்ஷய் கமல் யூடியூப்பர் இர்பான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இதற்கு போட்டியாக சன் டிவியிலும் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி நான்கு சீசன்களிலும் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் சன்டிவியில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார்.
இதனால் இதை இரு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான அக்ஷய் கமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார். இவர் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பின்னர் இந்திரா என்ற சீரியலிலும் தற்போது நடித்து வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் அக்ஷய் சீரியலில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக வேறு நடிகரை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி 3 மாதங்கள் மட்டும்தான் நடக்கும். அதற்காக சின்னத்திரை நடிகர் சீரியலில் இருந்து விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் அரங்கேறியுள்ளது.…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான…
தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள்…