தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகர்களை மதிப்புடன் நடத்தும் நல்ல மனிதராகவும் அஜித் நிஜ வாழ்க்கையில் இருந்து வருகின்றார். அஜித் தற்போது கார் ரேசிங்கில் மீண்டும் களம் இறங்கியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த மாதம் அஜித் நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே அஜித் நடித்து எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாலி.
இந்த திரைப்படத்தில் அண்ணன் மற்றும் தம்பி என இரட்டை வேடத்தில் அஜித் நடித்திருப்பார். தம்பியின் மனைவியின் மேல் ஆசை வைக்கும் அண்ணன் தனது சொந்த சகோதரனையே கொல்லும் எல்லை வரை செல்வதே இந்த படத்தின் கதை. ஹீரோ அஜித்தை விட இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்த திரைப்படம் குறித்து மறைந்த நடிகர் எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து சுவாரசியமான தகவல் ஒன்றை பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், வாலி படத்தில் நாங்கள் நினைத்த நிறைய காட்சிகளை எங்களால் எடுக்க முடியவில்லை. படத்தில் தனது கணவன் என நினைத்து அண்ணன் அஜித்தை சிம்ரன் கட்டிப்பிடித்து விடுவார்.
இதனால் சிம்ரன் மிகவும் குழப்பத்தில் அமர்ந்திருக்கும் போது தம்பி அஜித் தனது மீசையை எடுத்து விட்டு வருவார். மீசை இருப்பது தனது அண்ணன் என்றும் மீசை இல்லாதது தான் நான் என்றும் அடையாளம் காண அவர் இப்படி செய்வார். ஆனால் தம்பியை போல அண்ணன் அஜித்தும் மீசையை எடுத்து விடுவார். அந்தக் காட்சியை எடுக்க அஜித் சார் சம்மதிக்கவில்லை. அப்போது அவர் வேறு ஒரு படத்தில் நடித்து வந்ததால் தனது மீசையை எடுக்க மறுத்துவிட்டார். படப்பிடிப்பு முடிந்து கடைசியாக கூட எடுத்துக் கொள்ளலாம் என அவரிடம் கெஞ்சி பார்த்தோம். ஆனால் அஜித் சம்மதிக்கவில்லை என்று மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…