ஒரு படம் ஃப்ளாப் ஆனா அதுக்கு யார் பொறுப்பு..? அன்றே சொன்ன நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on ஆனி 26, 2024

Spread the love

ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் அது இயக்குனர்களுடைய வேலை அவர்தான் அதை சரியாக செய்திருக்க வேண்டும் என்று அஜித் பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தனது ரசிகர் மன்றத்தை கலைத்த போதிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் திரைப்படங்களை அஜித்தின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள்.பொதுவாக மற்ற நடிகர்களைப் போல நடிகர் அஜித் போது நிகழ்ச்சிகளிலோ விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலோ, பேட்டிகளிலோ பங்கேற்பது கிடையாது.

   

   

ஏனென்றால் தேவை இல்லாமல் சில விஷயங்களை பேசி விடுவதால் அது பிரச்சினையாகி விடுகிறது என்பதால் இது போன்ற விஷயங்களில் இருந்து தவிர்ப்பதற்காக தான் தற்போது எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகின்றார் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றநிலையில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

 

கடந்த இரண்டு வருடங்களாக விடாமுயற்சி திரைப்படத்தை ஜவ்வு போல் இழுத்து வருகிறார்கள். பொருத்து பொருத்து பார்த்த அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவரின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் அஜித்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் 1997 ஆம் ஆண்டு உங்களுடைய நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் பல படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. அதற்கு காரணம் நீங்கள் சரியாக படத்தின் கதையைக் கேட்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மைதானா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அஜித் அப்படி பார்த்தால் 96 இல் வெளியான எனது படங்கள் வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, காதல் கோட்டை ஆகிய படங்கள் அனைத்தும் நான் கதை கேட்காமல் ஒப்புக்கொண்ட படங்கள் தான்.

சினிமாவை பொருத்தவரை நான் ஒரு நடிகன். கதை கேட்டு ஒரு இயக்குனரிடம் திருத்தம் சொல்லும் அளவுக்கு எனக்கு அருகதை கிடையாது. அப்படி இருந்திருந்தால் நான் நடிகராக மாறி இருக்க மாட்டேன் இயக்குனராக இருந்திருப்பேன். படத்தின் கதையில் கவனம் செலுத்துவது ஒரு இயக்குனர் உடைய பொறுப்பு. ஒரு படம் வெற்றி அடைந்தால் மட்டும் அது இயக்குனர் பொறுப்பு என்று கூறுகிறீர்கள்.

அதுவே தோல்வி அடைந்தால் மட்டும் ஏன் நடிகர்களின் தவறு என்று கூறுகிறீர்கள். இரண்டரை கோடி செலவு செய்யும் தயாரிப்பாளர் அந்த கதையை கேட்டு தானே ஓகே செய்திருப்பார். அதற்கு எப்படி நான் பொறுப்பாக முடியும். கதை கேட்காமல் இருப்பது என்னுடைய தவறு என்றால், கதை கேட்டு அதை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளருக்கும், அதே பொறுப்பு இருக்கின்றது அல்லவா, இது என்னுடைய பொறுப்பு மட்டும் இல்லை என்று அவர் பதில் அளித்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.