தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக விடா முயற்சி திரைப்படம் வெளியான நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. நாளுக்கு நாள் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தரமான பேன் பாய் சம்பவமாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு குட் பேட் அக்லியை ஆதிக்கவிச்சந்திரன் இயக்கியுள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் தற்போது அஜித்தையே வைத்து படத்தை இயக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்த நிலையில் அஜித் பல கெட்டப்களில் மாஸ் காட்டி இருந்தார். இதனால் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குட் பேட் அக்லி கதைக்களம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்றை வெளியாகி உள்ளது. அதன்படி சிம்பு நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முதல் பாவத்தின் தோல்வியால் இரண்டாம் பாகம் எடுக்க முடியவில்லை. இப்படியான நிலையில் சிம்புவுக்காக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் உருவாக்கி இருந்த கதாபாத்திரம் ஒன்றை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிலும், மதுரை மைக்கேல் கதாபாத்திரத்திற்காக வைத்து இருந்த காட்சிகளை எடுக்க முடியாத நிலையில், அதன் கலவையாகவே அஜித் குமாரின் அக்லி கேரக்டரை டெவலப் செய்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன் என்று பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. அதன்படி அஜீத் இந்த படத்தில் 3 ரோலில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் அதில் ஒன்று சிம்புவுக்கு உருவாக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் என வலைப்பேச்சு குழுவினர் சமீபத்திய வீடியோவில் தெரிவித்துள்ளனர்.. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது.
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…