தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் அமீர். இவர் நடிகர் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்தி நடித்து வெளியான பருத்திவீரன் திரைப்படத்தை இவர் இயக்கிய நிலையில் இன்னும் தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் தலைநிமிர்ந்து நிற்கிறது.
இப்படி அடுத்தடுத்து பல திரைப்படங்களை இயக்கி வந்த அமீர் சில படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடித்திருப்பார்.
இப்படி பல திரைப்படங்களில் பிசியாக நடித்தும் பல திரைப்படங்களை இயக்கியும் வந்த அமீர் சமீபத்தில் புது பிசினஸை தொடங்கினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி மற்றும் மாயாஜால் சினிமாஸ் அருகே இவர் புதிய ரெஸ்டாரன்ட் தொடங்கியுள்ளார். இந்த ரெஸ்டாரன்டின் தொடக்க விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் தனது குடும்பத்துடனும் , நடிகர் சூரியும் கலந்து கொண்டனர்.
தற்பொழுது நடிகர் அமீரின் நடிப்பில் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த போஸ்டர்…
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…