Categories: சினிமா

பாலாவ வச்சு படம் எடுத்தா சம்பாதிக்க முடியாதுன்னு தெரியும்… இருந்தும் அந்த படத்த தொடங்குனேன்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

இயக்குனர் பாலாவுக்கு சமீபகாலமாக திரைவாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படம் அட்டர் ப்ளாப் ஆனது. வர்மா படம் அவர் இயக்கியது பிடிக்கவில்லை என்று மீண்டும் வேறொரு இயக்குனரால் இயக்கப்பட்டது. அதே போல சூர்யாவை வைத்து அவர் முதலில் இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அருண் விஜய்யை வைத்து அவர் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.

என்னதான் பாலாவின் படங்கள் பாராட்டுகளைக் குவித்தாலும் அவரது பெரும்பாலான படங்கள் வணிக வெற்றியைப் பெறுவதில்லை. சேது, பிதாமகன், அவன் இவன் போன்ற வெகு சில படங்களே வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவை. இந்நிலையில் பாலாவை வைத்து நான் கடவுள் படத்தைத் தொடங்கியவரும், பின்னர் வெளியேறிவருமான தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அவர் அளித்த ஒரு நேர்காணலில் “பாலாவை வைத்து படம் எடுத்தால் லாபம் சம்பாதிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு நல்ல படம் தயாரித்தோம் என்ற பேர் கிடைக்கும் என்பதற்காகதான் நான் ‘நான் கடவுள்’ படத்தைத் தயாரிக்க முன்வந்தேன். ஆனால் பட்ஜெட் எங்கோ எகிறியதால் நான் அதில் இருந்து வந்துவிட்டேன். அதில் எனக்கும் பாலாவுக்கும் நிறைய பிரச்சனை. ஆனால் இப்போது கூட பாலா கூட சேர்ந்து ஒரு படம் பண்ணவேண்டும் என்ற ஆசை உள்ளது” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

CM விஜய் கொடுத்த அந்த சீக்ரெட் ஆர்டர்…. ஒரே இரவில் சிக்கிய 42 ரவுடிகள்…. தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட அலெர்ட்….!

தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், காவல்துறையினரும்…

20 seconds ago

அதிமுகவுக்கு அடுத்த ஷாக்…. தவெக பக்கம் தாவுகிறாரா நத்தம் விஸ்வநாதன்?…. கொங்கு மண்டலத்தை ஆட்டிப்படைக்கும் புதுப் புயல்…. பரபரப்பு தகவல்….!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கடந்த சில நாட்களாகவே பொதுநிகழ்வுகளிலோ அல்லது கட்சித் திட்டங்களிலோ அதிகம்…

4 minutes ago

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் 33 ஓட்டுதானா?… ஜோதிடருக்கு சொந்த ஊரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தை சூடேற்றும் ராஜஸ்தான் தேர்தல் கூத்து….!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…

8 minutes ago

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

11 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

16 minutes ago