நடுக்கடல் டீலிங்!… நள்ளிரவில் சுற்றி வளைத்த DRI… லாட்ஜில் பதுங்கிய 135 கிலோ மெத்… ஓனர் பின்னணியில் யார்?… வெளிவந்த பகீர் நெட்வொர்க்…!!

Spread the love

நாகப்பட்டினம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 135 கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனர். வேளாங்கண்ணி அருகேயுள்ள பிரதாபராமபுரத்தில் பைனான்ஸ் மற்றும் விடுதி தொழில் நடத்தி வந்த சுகன் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், தலா 5 கிலோ கொண்ட 27 பாக்கெட்டுகளில் இந்தப் போதைப்பொருள் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இந்தக் கடத்தல் நெட்வொர்க்கின் முக்கிய நபராகக் கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் மற்றும் அவரது கூட்டாளிகளான சுகன், சதீஷ், மணிகண்டன் ஆகிய நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், அந்தத் தொடர்பைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும், தமிழகத்தில் முக்கிய நபர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கின் தொடர்ச்சியாக பூபாலனின் நெருங்கிய கூட்டாளியான பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை விரைவில் கைது செய்து குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

“நான் அவளோட அண்ணன்…” போலி போட்டோ… வலையில் சிக்கிய பெரிய புள்ளிகள்… ரூ.25 லட்சத்திற்கு மேல் வாரி சுருட்டிய வாலிபர்…. பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று…

5 minutes ago

“நெருங்கி வந்து ஆடையை கிழித்து…” பிரிட்டிஷ் சுற்றுலா பயணியிடம் அத்துமீறிய நபர்… நள்ளிரவில் பதற்றம்… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது…

18 minutes ago

“என்கவுண்டர் செய்தால் தான் உடலை வாங்குவோம்”… போலீஸ் அலட்சியமா?.. தூக்கிட்டு வீசப்பட்ட சடலம்… கதறும் குடும்பம்… உச்சகட்ட பதற்றம்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பணி முடிந்து வீடு திரும்பியபோது மாயமான உத்திரா என்ற 26 வயது இளம் செவிலியர்,…

25 minutes ago

“க்யூஆர் கோட் மேஜிக்…” சிட்டாக பறந்த பெண்கள்… கடை ஓனருக்கு ஷாக்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், இரண்டு பெண்கள் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது…

29 minutes ago

ஒழுங்கா பாத்துக்கலையா?… மாமியார் படுத்த படுக்கை… மாமனாருக்கு கத்தி குத்து… அலறியோடிய நோயாளிகள்… அரசு ஆஸ்பத்திரியில் ரத்தக் களறி…!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

37 minutes ago

“ஸ்கேனரில் சிக்கிய மர்மம்…” ஓட்டம் பிடித்த பயணி… மின்னல் வேகத்தில் மடக்கி பிடித்த சிஐஎஸ்எஃப் அதிகாரி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில், சாமான்களைச் சோதனை செய்யும் ஸ்கேனரில் சந்தேகத்திற்குரிய பொருள் சிக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட…

38 minutes ago