Google இல் Product Manager To CEO… சுந்தர் பிச்சை என்னும் தமிழன் உலகை திரும்பி பார்க்க வைத்த வெற்றிக் கதை தெரியுமா…?

Spread the love

சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார். பள்ளி படிப்பை முடித்த பிறகு ஐஐடி கரக்பூரில் உலோக பொறியியல் பயின்ற சுந்தர் பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ பட்டம் பெற்றார்.

சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுளில் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்பில் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் சிறிய குழுவுடன் பணியாற்றிய சுந்தர் பிச்சைக்கு google பிரவுசரை உருவாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது.

தனது மூத்த ஊழியர்களுடன் தனது சொந்த யோசனை குறித்து விவாதித்தார் சுந்தர் பிச்சை. ஆனால் அப்போதைய தலைமை நிர்வாகியான எரிக்ஸ் மிட்டன் எதிர்ப்பை தெரிவித்தார். ஒரு பிரவுசரை உருவாக்குவது மிகவும் விலை உயர்ந்த விவகாரம் என்று அவர் கூறினார். இருந்தாலும் சுந்தர் பிச்சை google பிரவுசரை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார். இதற்காக அவர் google ஊழியர்கள் எல்லாவற்றிற்கும் தனது யோசனையை புரிய வைத்தார். இறுதியில் 2008 ஆம் ஆண்டு கூகுள் குரோம் என்ற ப்ரவுசர் வெளியிடப்பட்டது.

Google chrome வெற்றி அடைந்தது. அதன் வெற்றியில் சுந்தர் பிச்சைக்கு முக்கிய பங்கு இருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஃபயர் ஃபாக்ஸ் போன்ற பிரவுசர்களை மிஞ்சி கூகுள் குரோம் தனித்துவமான வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றார் சுந்தர் பிச்சை. அதற்கு பிறகு குரோம் ஓஎஸ் குரோம் புக்ஸ் மற்றும் குரோம்காஸ்ட் போன்ற முக்கியமான தயாரிப்புகளை பின்னர் சுந்தர் பிச்சையின் கீழ் தயாரித்தனர்.

Google chrome வெற்றிக்கு பிறகு சுந்தர் பிச்சை தயாரிப்பு மேம்பாட்டு துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். 2012 ஆம் ஆண்டுக்குள் google chrome-இன் மூத்த துணை தலைவர் ஆனார். 2015இல் கூகுளின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டார்.

2016 இல் கூகுளின் நிறுவனமான ஆல்பபெடின் பங்குகள் சுந்தர் பிச்சையிடம் இருந்தன. இந்த பங்குகளின் மொத்த மதிப்புகள் 199 மில்லியன் டாலர்கள் ஆகும். தற்போது இந்த பங்குகளின் மதிப்பு 650 டாலர் வரை உயர்ந்துள்ளது. அதன் பிறகு ஜிமெயில் மற்றும் google டாக்ஸ் போன்ற பிற google-யின் தயாரிப்புகளில் நிர்வாக பொறுப்பையும் சுந்தர் பிச்சை ஏற்றுக்கொண்டார். இது மட்டுமில்லாமல் google-ளின் மிக முக்கியமான தயாரிப்புகளுக்கு பின்னால் உள்ள முக்கியமான மனிதர் என்று அழைக்கப்படுகிறார் சுந்தர் பிச்சை. ஒரு தமிழன் தனது திறமையினால் உலகையே திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர் ஆகும்.

admin

Recent Posts

குஷியோ குஷி..! தாய்மாமன் தங்கமோதிர திட்டம் தொடக்கம்.. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாய்மாமன் தங்க மோதிரம்…

50 seconds ago

தவெக-வில் இணைந்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’ வைத்த விஜய்..? இடைத்தேர்தலில் சீட் கிடையாது என அதிரடி முடிவு..!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்க…

4 minutes ago

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

30 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

41 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

50 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

59 minutes ago