#image_title
சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்டு நேர்மை உழைப்பு விடாமுயற்சி ஆகியவற்றால் உயர்ந்து ஒரு பெரிய இடத்திற்கு சென்ற போதும் சேவைகள் செய்யும் தொழில் நிறுவனங்களை பார்ப்பது சற்று கடினம் தான். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட செய்ய இயலாத பொதுச்சேவை செயல்பாடுகளை இன்று வரை செய்து உழைப்பின் மூலம் உயர்ந்து சமையல் மசாலா பொருட்கள் தயாரிப்பாளர்களில் முதல் இடத்தில் இருக்கும் ஈரோட்டை சேர்ந்த சக்தி மசாலா நிறுவனத்தின் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
டாக்டர் பி.சி துரைசாமி மற்றும் அவரது துணைவியார் டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர் தான் இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். சம்பளம் கொடுத்தால் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்ற முதலாளித்துவ சிந்தனைகள் இல்லாமல் தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை எடுப்பவர்கள். அதேபோல் இந்த சமூகம் உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது என ஒதுக்கி வைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடியும் உழைப்புக்கு ஏதும் தடை இல்லை என்ற இயக்கத்தின் மூலம் பல மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களது தொழிற்சாலையில் பணியமர்த்தி அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர்கள் சக்தி மசாலா நிறுவனத்தின் துரைசாமி மற்றும் சாந்தி.
தென் தமிழ்நாட்டில் ஈரோட்டில் 1975 ஆம் ஆண்டு பி.சி துரைசாமி மற்றும் துணைவியார் சாந்தி இணைந்து 300 சதுர அடியில் ரூபாய் 10 ஆயிரம் முதலீட்டில் மசாலா சில்லறை விற்பனையை செய்ய ஆலையை தொடங்கினர். ஊறுகாய், மாவு, சமையல் மசாலாக்கள், நெய் போன்ற 50க்கும் மேற்பட்ட மசாலா பொருட்களை சக்தி பிராண்ட் தயாரிக்கிறது. பிராண்டட் மசாலா பொருட்களில் இன்றளவும் சக்தி நிறுவனம் முன்னணியில் உள்ளது. ஆச்சி மசாலா வருவதற்கு முன்னரே முதலில் சந்தைக்கு வந்தது சக்தி மசாலா தான்.
இன்று சக்தி மசாலாவின் தயாரிப்புகள் தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அதுமட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா, ஐரோப்பியா, மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெறும் பத்தாயிரம் ரூபாயில் தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று ஆயிரம் தொழிலாளர்கள் அதில் மாற்றுத்திறனாளிகள் 30 ஏக்கருக்கும் மேல் நிலத்தில் தொழிற்சாலை 330 கோடி வருவாய் ஈட்டி உழைப்பினால் உயர்ந்து இருக்கிறது சக்தி மசாலா நிறுவனம்.
ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் சூரிய பிரபா என்ற பெண்ணின் கள்ளக்காதல் விவகாரம், தொழில்நுட்ப ரீதியாக அவரது கணவரிடமே…
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) காலியாக உள்ள 5138 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 20…
கரூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான MDA துரைமுருகன்,…
மும்பை மாநகரில் கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து 12 சிறுவர்கள் மாயமான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி, வி.கே.சசிகலா விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளார் என்பதாகும். இந்தக்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில், தற்போது நிலவும் உட்கட்சிப் பூசல்கள்…