#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது முயற்சியினால் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் மிமிக்ரி செய்பவராகவும் தனது கேரியரை ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன்.
அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று மெரீனா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். பின்னர் காமெடி கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையால் மக்களின் மனதில் இடம் பிடித்தார் சிவகார்த்திகேயன்.
தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான அமரன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் எப்படிப்பட்டவர் அவர் தீவிரவாதிகளுடன் போரிடும்போது என்ன யுக்தியை பயன்படுத்துவார் அவர் எவ்வளவு சாமர்த்தியசாலி என்பது உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் பிறந்து ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு முனைப்புடன் சிறுவயதிலேயே இருந்திருக்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். தன்னுடைய மரணம் இந்திய நாட்டிற்காகவும் இந்திய தேசத்திற்காக தான் நிகழ வேண்டும் என்பதை முன்னமே தனது மனதில் பதிந்து கொண்டவர் மேஜர் முகுந்த் வரதராஜன். ஜம்மு காஷ்மீரில் 44 வது ராஸ்டிரியா ரைபில் பட்டானில் மேஜராக பணிபுரிந்தவர் முகுந்த் வரதராஜன்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தாக்குதலில் எல்லோருக்கும் முன்பாக செல்பவராக இருந்திருக்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். இவர் மிகவும் சாமர்த்தியசாலியாக செயல்படுவார். எதிரிகள் பயன்படுத்தும் துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தை வைத்து அந்த ஆயுதத்தில் இருந்து எத்தனை குண்டுகள் வெளி வருகிறது என்பதை வைத்து அந்த ஆயுதம் எப்படி இருக்கும் என்பதை கணித்து விடுவாராம் மேஜர் முகுந்த் வரதராஜன்.
அதுமட்டுமில்லாமல் அவரது மனைவி இந்துவிடம் என்றைக்காக இருந்தாலும் என்னுடைய உயிர் நாட்டுக்காக தான் போகும் அப்படி நாட்டுக்காக நான் வீர மரணம் அடைந்ததற்கு பிறகு என்னுடைய இறுதி சடங்கில் நீ ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக்கூடாது என்று கூறியே தன் உயிரை நீத்திருக்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். இவரது வாழ்க்கை வரலாறு அமரன் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. இந்த படம் முடிந்த வெளிவரும்போது அனைவரும் கனத்த இதாயத்தோடும் கண்ணீர் சிந்தியும் கொண்டு வருகின்றனர். அந்த அளவுக்கு பார்வையாளர்கள் மனதில் பதிந்து விட்டார் மேஜர் முகுந்த் வரதராஜன்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…