#image_title
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு சிறப்பான உகந்த மாதம் தான். இந்த மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை காண சபரிமலைக்கு செல்வார்கள். பல கன்னி சாமிகளும் செல்வர். மற்ற கடவுள்களை விட ஐயப்பனின் விரதம் தான் மிக நீண்ட நாட்களைக் கொண்டது. எல்லாவிடத்திலும் கன்னிசாமி பூஜைகள் சபரிமலை பூஜை எல்லா இடத்திலும் ஐயப்பன் 18 படிகளுக்கு மேல் அமர்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த 18 படிகளின் முக்கியத்துவம் என்ன அதன் சிறப்புகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
சபரிமலை ஐயப்பன் சிவன் விஷ்ணுவின் ஐக்கியம் என்பார்கள். சிவன் விஷ்ணு சக்தியால் உருவானவர்தான் ஐயப்பன். ஐயப்பனுக்கு மாலை அணிந்து கோவிலுக்கு விரதம் இருந்து செல்பவர்கள் இந்த 18 படிகளின் மேல் ஏறுவதே புண்ணியமாக கருதுவார்கள். இந்த தங்க தகடு பூசப்பட்டிருக்கும் இந்த 18 படிகளில் ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும்போது நம் வாழ்வில் எல்லா வளமும் செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த 18 படிகளில் தெய்வம்சம் என்னவென்றால் முதல் படி சூரியன் தொடர்ந்து சிவன் சந்திரன் பராசக்தி செவ்வாய் முருகன் புதன் மகாவிஷ்ணு குரு பகவான் பிரம்மா சுக்கிரன் திருவரங்கன் சனீஸ்வரன் எமதர்மன் ராகு காளி கேது விநாயகர் முறையே 18 படிகளுக்கும் இந்த தெய்வம்சங்கள் ஆக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த 18 படிகளை விரதம் இருந்து ஒரு மனிதன் கடக்கும் போது அவன் வாழ்வில் கடக்க வேண்டிய ஐம்புலன்கள் ஐம்பொறிகள் உணர்ச்சிகள் குணங்கள் ஞானம் அஞ்ஞானம் போன்ற 18 விஷயங்களை ஒரு மனிதன் கடக்கும் போது அவன் வாழ்வில் எந்த ஒரு தடைகளையும் தாண்டி முன்னேறுவான் என்பதே இந்த 18 படிகள் குறிக்கின்றன. அதேபோல் இந்து மதத்திலும் ஒன்பது 18 போன்ற எண்களுக்கு சிறப்பு இருக்கிறது. 18 ஆண்டுகள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வந்தவர்களை குருசாமி என்கிறார்கள். அதுபோல இந்த 18 படிகளும் மிகச் சிறப்பு வாய்ந்தது. தவறாமல் சபரிமலை ஐயப்பனுக்கும் பூஜை செய்வது போல இந்த 18 படிகளுக்கும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…