#image_title
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க புகழ்பெற்ற இடங்களில் ஒன்றுதான் குதுப் மினார். இது தில்லியில் அமைந்திருக்கிறது. 238 அடி உயரம் கொண்ட உலகிலேயே செங்கலால் உருவாக்கப்பட்டு கம்பீரமாக நிற்கும் ஒரே நினைவுச் சின்னம் அல்லது தூபி இதுவே ஆகும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குதுப் மினார் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
இந்தியாவின் முதல் இஸ்லாமிய மன்னரான குத் புத்தீன் ஐபக் ஆணையின்படி இந்த குதுப்மினாரின் கட்டிடப் பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1386 ஆம் ஆண்டில் பிரூசு சா துக்ளக் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த குதுப்மினார் இந்திய இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் பழமையான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு தொடக்கமாகவும் இந்த குதுப் மினார் திகழ்கிறது.
இந்தியாவில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் இந்த குதுப் மினார் ஆகும். இந்த குதுப் மினாரின் உச்சிவரை சென்றடைய 378 படிகள் ஏற வேண்டும். மக்கள் நடந்து செல்லும் வழிகள் அனைத்தும் சிவப்பு மண் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த குதுப்மினார் ஒரு திசையில் சற்று சரிந்து இருப்பது இதற்கு மேலும் சிறப்பு வாய்ந்ததாகவும் அழகு ஊட்டுவதாகவும் இருக்கிறது.
இந்த தூபி சிவந்த வரை மறக்கக்களால் கட்டப்பட்டது மட்டுமல்லாமல் குர்ஆனிலிருந்து கவிதைகள் மற்றும் அழகிய வசனங்களை வெளிப்பாடுகளாக செதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோபுரம் எதற்காக கட்டப்பட்டிருக்கிறார்கள் என்று விவாதித்த பொழுது டெல்லி சுல்தான்கள் தொழுகைக்காக கட்டி இருக்கலாம் அல்லது வெற்றி வாகை சூடியதை கொண்டாடுவதற்காக இந்த தூபியை எழுப்பி இருக்கலாம் என்ன பல விவாதங்கள் எடுத்துரைக்கின்றது. இரண்டிற்கும் மேலாக ஏற்பட்ட பூகம்பத்தில் குதுப்மினார் சற்று அழிந்தாலும் அதற்கு அடுத்து வந்தவர்கள் அதை பராமரித்து வைத்திருக்கிறார்கள். யுனெஸ்கோ அமைப்பினரால் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் இது இடம்பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…