#image_title
இந்து மத வழிபாட்டில் தேங்காய் மிக முக்கியமான பொருளாக இடம் பெறுகிறது. எந்த ஒரு பூஜையிலும் தேங்காய் உடைத்து தான் படையல் போட்டு வழிபாடு செய்வார்கள். ஆனால் இந்த தேங்காய் வைத்து விளக்கு ஏற்றலாமா என்பது பலருக்கு இருக்கக்கூடிய சந்தேகம் தான். சமீபத்திய காலங்களில் தேங்காய் தீபம் என்பது பிரபலமாகி கொண்டு வருகிறது. இந்த தீபம் எந்த தெய்வங்களுக்கு ஏற்றலாம் அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
இந்து சாஸ்திரத்தில் தேங்காய் தீபத்தை பற்றி சரியான விவரங்களை குறிப்பிடவில்லை என்றாலும் பழங்காலத்தில் பெண் தெய்வங்களுக்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானதாக கூறப்பட்டிருக்கிறது. அதற்கு விசேஷ பலன்கள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக தேங்காய் எண்ணையில் தீபம் ஏற்றும் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றால் அதில் கண்டிப்பாக நெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் நல்லெண்ணெய் ஊற்றியும் விளக்கு ஏற்றலாம் மற்ற எண்ணெய்களை ஊற்றி விளக்கு ஏற்றுவது என்பது உகந்தது கிடையாது. பஞ்சமி திதியில் வராஹி அம்மனுக்கு இந்த தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவது உகந்ததாகும்.
மாதத்தில் வரக்கூடிய தேமுறை பஞ்சமி வளர்பிறை பஞ்சமி ஆகிய திதிகளில் வராஹி அம்மனை இந்த தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்போது திருமணத்தடை குழந்தை பாக்கியம் தொழிலில் முன்னேற்றம் காரியத்தில் வெற்றி போன்ற சகல நன்மைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…