ஒரு நாளைக்கு சென்னையில் மட்டும் 40000 காபி விற்பனை… ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபியின் வெற்றிக் கதை…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் நிறைய உடலில் சார்ந்த பிரச்சினைகளும் இளம் வயது மரணங்களும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மக்கள் பழைமைக்கு திரும்ப ஆரம்பித்து விட்டார்கள். கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு மக்களுக்கு உடல்நலனில் அக்கறை எடுக்க வேண்டும் என்ற பயம் ஏற்பட்டு விட்டது. அதனால் சத்தான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும் பாஸ்ட் புட்களை தவிர்க்க வேண்டும் என்று பல மக்கள் நினைக்கிறார்கள்.

அதன் விளைவாக சிறுதானிய உணவு வகைகள் கம்பு கூழ் ராகி கூழ் கருப்பு கவுனி அரிசி மாப்பிள்ளை சம்பா என்ன பல சத்தான உணவுப் பொருட்களை சாப்பிட தொடங்கி விட்டார்கள். அதற்கு தகுந்தார் போல் விற்பனை நிலையங்களும் கூடி விட்டன. பெரிய பெரிய பிராண்டுகளும் சிறுதானியங்களை வைத்து பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. அதுபோல கடை தான் லடிபட்டியான் கருப்பட்டி காப்பி கடை. இதன் விசேஷம் என்ன இது எப்படி உருவானது இதன் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை பற்றி இனி காண்போம்.

ஆலடிபட்டியான் கருப்பட்டி காப்பியின் உரிமையாளர் மோசஸ் பாலன். இதைப் பற்றி கூறும் பொழுது, நாங்கள் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு எம் பி ஏ படிப்பதற்காக வந்தோம். அப்பொழுது மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்யும் ஒரு பொருளாக நாங்கள் திருநெல்வேலியில் இருந்து அல்வாவை கொண்டு வந்த விற்பனை செய்தோம். அப்போது எங்களுடைய விற்பனை அமோகமாக நடந்தது. அதற்காக கல்லூரியில் விருதும் கிடைத்தது. ஏனென்றால் திருநெல்வேலியில் இருந்து கொண்டு வந்ததால் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போனது.

இதை மையமாக வைத்து அல்வா கடை டாட் காம் என்று 2016 ஆம் ஆண்டு தொடங்கினோம். இரண்டு வருடங்கள் அல்வா கடை டாட் காமில் அல்வா விற்பனை செய்து வந்தோம். ஆனால் அது பிரஷ்ஷாக இல்லை என சில கஷ்டமர்கள் கம்ப்ளைன்ட் கூறினார்கள்.

ஆனால் உடனடியாக கிடைக்கும்படி நாம் செய்து விற்பனை செய்தால் என்ன என்ற முனைப்பில் தான் முதலில் சிறிய கடையாக அல்வாவிற்கும் டையாக ஆரம்பித்தோம். அதற்குப் பிறகு காலை மதியான நேரங்களில் ஏதாவது கஸ்டமர்க்கு வழங்கினால் நன்றாக இருக்குமே என்று யோசித்தோம். நாங்கள் திருநெல்வேலியை பூர்வமாக கொண்ட நாங்கள் நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து தான் இதை ஆரம்பித்தோம். திருநெல்வேலியில் கருப்பட்டி காபி என்பது மிகவும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒன்று. ஆனால் அது சென்னையில் கிடைப்பதில்லை.

அந்த ஐடியாவை வைத்து காபியிலேயே கருப்பட்டி வைத்து கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். திருநெல்வேலியில் எங்கள் ஊர் ஆலடிப்பட்டி. அதன் பெயரை வைத்து ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி என்று 2018 ஆம் ஆண்டு தொடங்கினோம். அதில் சிறுக சிறுக கருப்பட்டியாலான இனிப்புகளை நாங்கள் சேர்க்க ஆரம்பித்தோம். கருப்பட்டியால் செய்த அல்வா கருப்பட்டியால் செய்த காஜூட்லியை அறிமுகப்படுத்தியது நாங்கள் தான்.

இது தவிர டிபன் ஐட்டங்களும் சிறுதானியங்களில் செய்ததை நாங்கள் விற்பனை செய்கிறோம். இன்று சென்னையில் மட்டுமே 40 ஆயிரம் கருப்பட்டி காபி எங்களது கடைகளில் விற்பனையாகி வருகிறது. மக்கள் இதை ரொம்ப விரும்பி சாப்பிடுகிறார்கள். தற்போது 51 அவுட்லெட்டுக்கு மேல் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இன்னும் இதை அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம் என்று மோசஸ் பாலன் தெரிவித்தார். பழமையை புதிய முறையில் மாற்றிக் கொடுத்ததன் மூலம் வெற்றி கண்டிருக்கிறார் மோசஸ் பாலன்.

admin

Recent Posts

ஐயோ கடவுளே… கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்து பறந்து விழுந்த கார்… துடிதுடித்து பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண்… பெங்களூரில் அரங்கேறிய கோர விபத்து…!!

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் மண்டியா அருகே உள்ள உம்மடஹள்ளி கேட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச்…

4 minutes ago

நாட்டை உலுக்கிய நிதாரி வழக்கு…! உண்மைகளை மூடி மறைக்க கொன்றுவிட்டார்களா…? குற்றவாளி உயிரிழந்ததில் பின்னணி என்ன…? 15 வயது சிறுமியின் தந்தை எழுப்பிய பகீர் சந்தேகம்…!

இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…

11 minutes ago

ஐயோ… கண்ணிமைக்கும் நேரத்தில் ஊரே அழிஞ்சிருச்சு… மலை கிராமத்தையே விழுங்கிய மாபெரும் நிலச்சரிவு… சீனாவில் நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…

15 minutes ago

ஐயோ பாவம்… போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸை… நிறுத்தியபடியே ஓட்டுநர் திடீர் மரணம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சோகம்…!!

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…

28 minutes ago

“வாடி குடும்பம் நடத்தலாம்”…. வர மறுத்த மனைவி… குறுக்கே வந்த மாமனார், மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்… திருவள்ளூரில் நள்ளிரவு பயங்கரம்…!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

நாய்கள் கடித்த சடலம்… டெல்லியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்….. டெம்போவில் கதற கதற…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…

1 மணத்தியாலம் ago