#image_title
தற்போது சமூக வலைத்தளம் முழுவதுமாக பேசு பொருளாக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் ஆன விஜய் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமும் விகடன் குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
அங்கு வந்திருந்த ஆதவ் அர்ஜுனா விஜய் இடம் மிகவும் அன்போடு நட்போடு பழகினார். அரசியல் கருத்துக்களை பேசக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறிய போதிலும் இவர் திமுகவை தாக்கி பேசியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஆதவ் அர்ஜுனா விஜயின் கட்சியில் இணைய போவதாக பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஆதவ் அர்ஜுனா யார் என்பதை பற்றி இனி காண்போம்.
ஆதவ் அர்ஜுனா 1982 ஆம் ஆண்டு திருச்சியில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தார். பள்ளி படிப்பை முடித்த பின்பு அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும் பெற்றார். ஆதவ் அர்ஜுனாவிற்கு கூடைப்பந்து மீது இருந்த ஆர்வத்தினால் விளையாட்டிலும் கடுமையாக உழைத்து தான் திறனை மேம்படுத்தினார் ஆதவ் அர்ஜுனா. கூடைப்பந்தில் மாவட்ட மாநில தேசிய அளவில் தொடர்ந்து முன்னேறி கூடைப்பந்து வீரராக பிரபலமானார் ஆதவ் அர்ஜுனா.
தனது விடாமுயற்சியின் மூலம் இந்தியக் கூடை பந்து கூட்டமைப்பின் தலைவராக ஆனார் ஆதவ் அர்ஜுனா. இது மட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஆதவ் அர்ஜுனா. தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா.
இது மட்டுமல்லாமல் அரசியல் வியூக வல்லுனராகவும், சமூக சேவகராகவும் செயல்பட்டு வருகிற ஆதவ் அர்ஜுனா. அரசியலில் தனக்கு இருந்த அறிவையும் படித்தவைகளையும் வைத்து அற்புதமாக பேசக் கூடியவர் ஆதவ் அர்ஜுனா. திமுக உடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவில் திமுகவை தாக்கி பேசியதற்காக ஆதவ் அர்ஜுனாவை தனது கட்சியில் இருந்து ஆறு மாதத்திற்கு இடைக்காலமாக நீக்கி இருக்கிறார். இதற்கு அடுத்ததாக ஆதவ் அர்ஜுனா விஜயின் கட்சியில் தனக்கு ஒரு பொறுப்பு கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்து விஜய் கட்சியில் இவருக்கு பொறுப்பு கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…