பஞ்சாப் மாநிலம் பாகவாராவில் உள்ள லவ்லி புரஃபெஷனல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பதற்றமான சூழல் குறித்து ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜித் தீப்கே கவலை தெரிவித்துள்ளார். ஆயுதம் ஏந்திய சில சமூக விரோதிகள் மாணவிகள் விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறி மாணவி ஒருவர் பேசும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், பல்கலைக்கழக வளாகங்கள் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்றும், அடிப்படைப் பாதுகாப்புக்காக அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்படுவது தீவிரமான பிரச்சனை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, வார இறுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் வன்முறையாக மாறியதில் காவல் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், கல்விக்கூட கட்டிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும், வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாகப் பல்கலைக்கழகப் வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
இச்சம்பவங்களை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் இடைப்பருவத் தேர்வுகளை ஒத்திவைத்ததுடன், 10 நாட்களுக்கு வகுப்புகளையும் ரத்து செய்துள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களைத் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பல மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வரும் நிலையில், வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டு நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…