“அவருக்கு 6 மணிக்கு மேல் கண்ணு தெரியாது!.. வெளியே வரமாட்டாரு… இது என்ன ஷூட்டிங்கா?”… கவுண்டமணி ஸ்டைலில் நடிகரை வறுத்தெடுத்த ஆர்த்தி…!!!

Spread the love

குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமாகி, நகைச்சுவை நடிகையாகவும் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் பரிச்சயமானவர் ஆர்த்தி கணேஷ்கர். சமீபத்தில் தனது தந்தையின் மறைவின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காட்டிய கனிவான அணுகுமுறை குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். அடையார் பூங்காவில் முதல்வரைச் சந்தித்தபோது, தான் முன்பு அதிமுகவில் இருந்து விமர்சித்தது குறித்துத் தயங்கி நின்ற தன்னை அழைத்து, “என்னைத் திட்டியதெல்லாம் முடிந்துவிட்டதா?” என கலைஞர் பாணியில் முதல்வர் நகைச்சுவையாக நலம் விசாரித்ததை ஆர்த்தி நன்றியுடன் நினைவுகூர்ந்திருந்தார்.

தற்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ஆர்த்தி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதிகளில் வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அம்பேத்குமாருக்காக வாக்கு சேகரித்த அவர், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்துப் பாராட்டிப் பேசினார். இது பெண்களுக்கு வழங்கப்படும் இலவசம் அல்ல, அவர்களின் உழைப்பிற்கு முதல்வர் வழங்கும் உரிமைத் தொகை என்று அவர் பொதுமக்களிடையே விளக்கிக் கூறினார்.

அதே சமயம், எதிர்க்கட்சிகளையும் களத்தில் இருக்கும் மற்ற வேட்பாளர்களையும் ஆர்த்தி தனது பாணியில் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, தேர்தல் களத்தில் இருக்கும் ஒரு நடிகரைச் சுட்டிக்காட்டி, அவர் தற்போதுதான் அரசியலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்றும், சினிமாவைப் போலவே மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரத்திற்கு வராமல் ‘மாலைக்கண் நோய்’ பாதித்தவர் போலச் செயல்படுகிறார் என்றும் கிண்டலாகப் பேசினார். ஆர்த்தியின் இந்த அனல் பறக்கும் பிரச்சாரத்தைக் கேட்டு அங்கிருந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்து கைதட்டி வரவேற்றனர்.

Muthu Mani

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

26 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

36 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

52 minutes ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

1 மணத்தியாலம் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago