“பணி நேரத்திற்கு பிறகும் மெசேஜ் வருது… அப்புறம் எதுக்கு இந்த முறை..?” கார்ப்பரேட் கலாச்சாரத்தை விமர்சித்த இளம்பெண்… விவாதத்தை கிளப்பிய இன்ஸ்டாகிராம் பதிவு…!!

Spread the love

கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்யப் பயன்படும் பஞ்ச்-இன், பஞ்ச்-அவுட் முறையைக் கடுமையாக விமர்சித்து மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வரும் தாஷி துக்ரால் என்பவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அவர் தனது பதிவில், “தொழிற்சாலை தொழிலாளர்கள் அல்லது தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு இந்த முறை சரியாக இருக்கலாம். ஆனால், அலுவலகப் பணிகளில் இருக்கும் ஊழியர்களின் திறமையையும் செயல்திறனையும் அவர்கள் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தைக் கொண்டு அளவிடக் கூடாது.

https://www.instagram.com/reel/Dc_3dlwRY_u/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

அலுவலக நேரத்தைத் தாண்டியும் வாட்ஸ்அப்பில் வேலை சார்ந்த செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள், பஞ்ச்-இன் பஞ்ச்-அவுட் முறையைக் கட்டாயப்படுத்துவது முட்டாள்தனமானது” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவிற்கு சமூக வலைத்தள பயனர்கள் பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், “வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்களைத் தொடர்புகொள்வதைத் தடுக்கும் சட்டங்கள் வர வேண்டும்” எனக் கூறியுள்ளனர். அதேவேளையில் எச்.ஆர் துறையைச் சேர்ந்த சிலர், “முடிவுகளை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் பணி நேரத்தைக் கணக்கிடுவது தவறானதுதான்” என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

9 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

11 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

16 minutes ago

பைக் கேட்டு அடம் பிடித்த மகன்… பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்…. மொட்டை மாடியில் நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் உண்மை…!!

கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…

20 minutes ago