இன்ஸ்டாகிராமில் ஆபாச தொல்லை.. சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்.. பின்னணி என்ன..?

Spread the love

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண், பி.எஸ்.சி விஸ்காம் படித்து முடித்துவிட்டு சினிமா துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சில போலி கணக்குகள் (Fake IDs) மூலம் தொடர்ந்து ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வந்துள்ளன. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் அந்த நபர், இப்பெண்ணின் சகோதரருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவரைப் பற்றி அவதூறாகப் பேசி, ஆபாசப் படம் ஒன்றை அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். சைபர் க்ரைம் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த விசாரணையில், ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் சென்னை சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்த பிரைஸ் கிறிஸ்டன் (21) என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரைஸ் கிறிஸ்டனும் பாதிக்கப்பட்ட பெண்ணும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் ஒன்றாக இணைந்து ஒரு குறும்படம் (Short Film) எடுத்தபோது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகையின் காரணமாகவே, பிரைஸ் கிறிஸ்டன் பல போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி அந்தப் பெண்ணிற்குத் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி பழிவாங்க முயன்றுள்ளார். விசாரணையின் முடிவில் பிரைஸ் கிறிஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Swetha

Recent Posts

“மடியில் அமர வைத்து… கழிவறைக்கு வந்தார்…” கேள்வித்தாள் வாங்க வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஷாக்…. மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்…. பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…

6 minutes ago

“உடலில் தீப்பற்றி அலறியபடி ஓடிய காதலி…” பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து…! கள்ளக்காதலை துண்டித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ்…! பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…

20 minutes ago

“அம்மா அந்த சித்தப்பா என்னை..” 8 வயது சிறுமியை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று…! விளையாட சென்ற போது அரங்கேறிய கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…

33 minutes ago

“தப்பு பண்ணிட்டேன்… நான் அப்படி சொல்லிருக்க கூடாது…” ஐ.ஐ.டி பாம்பே மாணவர் தற்கொலை… மகனை இழந்த தந்தையின் கண்ணீர்…. பெரும் சோகம்…!!

மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…

44 minutes ago

ராங் ரூட்டில் போறீங்க…” பைக்கில் வந்து அட்ராசிட்டி… ஊழியரை கொடூரமாக தாக்கி கொன்ற கும்பல்…. பதற வைக்கும் CCTV காட்சிகள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…

1 மணத்தியாலம் ago

“என்ன தான் நடக்குது…?” ஒன்றும் அறியாமல் நின்ற வாலிபர்…. திடீரென வந்து சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்…. நொடியில் நடந்த சம்பவம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் வாலட்டர்கஞ்ச் போலிஸ் எல்லைக்குட்பட்ட கணேஷ்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையோரமாக அமைதியாக நின்று…

1 மணத்தியாலம் ago