சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் வாடகை வீட்டில் தம்பதி ஒருவர் வசித்து வந்துள்ளனர். கடந்த 22 ஆம் தேதி இருவரும் தங்கள் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளன. அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களுடைய செல்போனில் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற ஒரு நபர், நான் ஒரு இன்ஸ்பெக்டர், உங்கள் மீது தொடர்ந்து புகார் வருகிறது. விசாரணைக்கு வாருங்கள் என்று கூறி தன்னுடைய காரில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன்பிறகு அந்த பெண்ணிடம் தன்னிடம் உள்ள வீடியோவை காட்டி இது நீங்கள் தானே என்று கேட்டுள்ளார். வீடியோவை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து எப்படி இதை எடுத்தீங்க என்று கேட்டுள்ளார். உடனே அந்த நபர், இந்த வீடியோவை யாருக்கும் அனுப்பக்கூடாது என்றால் 3 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று மிரட்டிய அவர் அணிந்திருந்த செயினை கேட்டுள்ளார். உடனே அந்தப் பெண் அது கவரிங் என்று தெரிவிக்க பிறகு நாளை 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு உன் கணவரிடம் கூறாமல் உல்லாசமாக இருக்க நான் செல்லும் இடத்திற்கு வரவேண்டும், இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி அவர் மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தன்னுடைய கணவரிடம் இது குறித்து தெரிவிக்க உடனே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நான்கு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கூறுகின்றன.
சமையல் எண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன்று பல வீடுகளில்…
கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் 2026-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் (Graduate & Technician Apprentice)…
கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலனுடன் இணைந்து இந்த…
இன்றைய டிஜிட்டல் உலகில் நிதி சார்ந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பான் கார்டு (PAN Card) ஒரு முதுகெலும்பாகத் திகழ்கிறது. வருமான…