பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கடந்த 20ஆம் தேதி அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார். மது பாட்டிலை வாங்கி அங்கேயே உட்கார்ந்து குடித்த சிறிது நேரத்தில், அவர் அதே இடத்தில் கீழே சாய்ந்து அசைவின்றி கிடந்துள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அவர் எழுந்திருக்காததால், அப்பகுதி மக்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவர் எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால், கமலக்கண்ணன் உயிரிழந்துவிட்டதாகக் கருதி, அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, மாங்காடு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல் ஏற்கெனவே வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதை அறிந்தனர்.
அங்கு சென்ற போலீசார் கமலக்கண்ணனின் குடும்பத்தாரிடம் பேசிய பிறகு, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அவர் மது அருந்தியதால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெரியம்மத்தூர் டாஸ்மாக் கடையில் தரமற்ற அல்லது போலியான மதுபானங்கள் விற்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அந்தக் கடையில் ஆய்வு செய்து, தரமற்ற மதுபான விற்பனையைத் தடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…