திருமணமான 45 நாட்களில் மனைவி தனது காதலனுடன் ஓடிப்போன வேதனையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாவணகெரே மாவட்டம் கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான ஹரீஷ் என்ற இளம் விவசாயிக்கும், ஒரு பெண்ணிற்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்த வாலிபருடன் மனைவி தொடர்ந்து தொடர்பில் இருந்ததை ஹரீஷ் கண்டறிந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ஹரீஷ், சமீபத்தில் தனது மனைவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த துயர சம்பவத்திற்கு முன்னதாக ஹரீஷ் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், தனது தற்கொலைக்கு தனது மனைவி, மாமனார், மாமியார் மற்றும் மனைவியின் காதலன் ஆகியோரே காரணம் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி தன் மீது பொய்யான புகார்களைக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அந்த கடிதத்தில் ஹரீஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கடிதத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே நடந்த இந்த விபரீத முடிவு அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…