“இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக இப்படியா?.. அசுர மலைப்பாம்பு மீது படுத்திருக்கும் சிறுமி.. பதறாமல் வீடியோ எடுக்கும் குடும்பம்.. கொந்தளித்த நெட்டிசன்கள்”..!!

Spread the love

இணையத்தில் சில பார்வைகளுக்காகவும் ரீல்களுக்காகவும் மக்கள் தங்கள் உயிரையே பணயம் வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சிறுமி மாபெரும் மலைப்பாம்பின் மீது படுத்து விளையாடும் திகிலூட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒருவர் பிரம்மாண்டமான வலைப்பாம்பின் (Reticulated Python) உடலைத் தூக்கிச் சிறுமியின் மீது வைக்க, அவளோ எவ்வித பயமுமின்றி அதன் மேல் சாதாரணமாகப் படுத்துக் கொள்கிறாள். “ரியல் டார்சான்” என்று அழைக்கப்படும் பிரபல அமெரிக்க இன்ஃப்ளூயன்சர் மைக் ஹோல்ஸ்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.

இந்தக் காணொளி வெளியான உடனே நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருவேளை அந்தப் பாம்பு பசியோடு இருந்து சிறுமியைத் தாக்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என்றும், வெறும் சமூக ஊடகப் புகழுக்காகத் தன் மகளின் உயிரைப் பணயம் வைக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற பெற்றோர்களை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மக்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், ஒருமுறை இந்த விலங்கு தனது பிடியை இறுக்கினால் சில நொடிகளில் உயிர் பிரிந்துவிடும் என்றும் பல பயனர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட பாம்பு இனமான இந்த வலைப்பாம்புகள் சராசரியாக 22 அடி முதல் 31 அடி நீளம் வரையும், 75 முதல் 150 கிலோ எடை வரையும் வளரக்கூடியவை. இந்தோனேசியாவின் காடுகளைத் தாயகமாகக் கொண்ட இந்த மலைப்பாம்புகளுக்கு மனிதர்களை முழுமையாக உயிருடன் விழுங்கும் திறன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆபத்தான வேட்டையாடும் விலங்கைச் செல்லப் பிராணி போலக் கருதி, குடும்பத்தினரே நின்று வீடியோ எடுத்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“என்னை விடுங்க சார்…” 16 வயது மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஊழியர்…. பள்ளியில் வைத்து அத்துமீறல்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

8 மணத்தியாலங்கள் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

8 மணத்தியாலங்கள் ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

8 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

8 மணத்தியாலங்கள் ago