#image_title
தமிழ் சினிமா என்றொன்றும் மறக்க முடியாத நாயகன் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இன்றளவும் அவர் இடத்தை எவராலும் நிரப்ப முடியவில்லை. அப்படி ஒரு தனித்துவமான மனிதராக திகழ்ந்தவர் MGR .
ஆரம்பத்தில் குடும்ப வறுமையின் காரணமாக நாடகக் குழுவில் நடித்து பின்பு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து துணை கதாபாத்திரத்தில் நடித்து என பத்து வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு நாயகனாக வாய்ப்பு கிடைத்து நடித்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் MGR . இவர் நாயகனாக நடிக்க ஆரம்பித்த பின்பு பெரும்பாலான படங்கள் அனைத்தும் ஹிட்டானவைகள் தான்.
இவருடன் நடிப்பதற்கு இவரை வைத்து படம் இயக்குவதற்கு நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என போட்டி போட்டு வருவர். இவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் இல்லை பக்தர்கள் என்றே சொல்லலாம். நடிப்பில் மட்டுமல்லாமல் மக்கள் பணியின் மீதும் ஆர்வம் கொண்டிருந்த MGR தமிழ்நாட்டின் முதலமைச்சராக இறக்கும் வரையில் சிறப்பாக ஆட்சி நடத்தியவர்.
நாம் மக்களை விரும்பினால் மக்கள் நம்மை அதிகமாக விரும்புவார் என்ற கோட்பாட்டுடன் பணியாற்றியவர் MGR .அவர் மக்கள் மீது மனிதர்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பது ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
ஆரம்பத்தில் நாடகத்தில் நடித்த பின்பு சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்த பிறகு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடக்குமாம். அப்போது ஒரு இடத்தில் MGRரை உட்கார செய்திருப்பார்களாம். அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டால் எங்கே அவரை காணும் என்று கூறி தமக்கு வாய்ப்பு தராமல் போய்விடுவார்களோ என்று ஒரு இடத்திற்கும் நகராமல் அங்கே அமர்ந்திருப்பாராம் MGR .
அப்போது அவர் ஒரு முறை அமர்ந்திருக்கும் போது தண்ணீர் தாகம் எடுத்ததாம். அப்போது அங்கே வேலை பார்த்த ஊழியர் தண்ணீர் குடுவை எடுத்துச் செல்லும்போது அண்ணன் தாகமாருக்கு தண்ணீர் கொடுங்கன்னு கேட்டிருக்கிறார். உடனே அவர் பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் ஜூஸ் போட்டு கொடுக்கணும்னு அவசரமா போறேன்னு போய் விட்டாராம். பிறகு MGR பெரிய ஹீரோவாகி அந்த ஸ்டுடியோவை விலைக்கி வாங்கி இருக்கிறார்.
அந்த ஸ்டுடியோக்கு போகும்போது மறுபடியும் அந்த ஊழியரை பார்க்கிறார். அந்த ஊழியர் கூனிக்குறுகி MGR முன் நின்று இருக்கிறார். உடனே அந்த ஊழியரை அழைத்து MGR உங்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்டிருக்கிறார் 200 ரூபாய் என்று அந்த ஊழியர் கூறியிருக்கிறார். இன்றிலிருந்து உங்களுக்கு சம்பளம் 500 ரூபாய் என்று கூறியிருக்கிறார் MGR . உடனே அந்த ஊழியர் MGR காலில் விழுந்து கதறி அழுது சென்று இருக்கிறார். இதன் மூலம் மனிதர்கள் மீது MGR எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பது நமக்கு தெரிகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…
சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…