கள்ளக்குறிச்சி மாவட்டம், புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர், தனக்குச் சொந்தமான 4 சென்ட் நிலத்தைத் தனிநபர்கள் ஆக்கிரமித்ததாகக் கூறி கடந்த 10 ஆண்டுகளாக தலைமைச் செயலகம் முதல் டிஜிபி அலுவலகம் வரை பலமுறை மனு அளித்து வந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை தந்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசனைச் சந்தித்து, தனது நீண்ட நாள் நிலப் பிரச்சினை குறித்த குறைகளை அவரிடம் நேரில் எடுத்துக் கூறினார்.
பொதுமக்களின் மனுக்களைப் பெற்ற எம்பி, உடனே தன்னிடம் இருந்த உதவியாளரிடம் அப்பெண்ணை அழைத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென ஓடிவந்த செல்வி, “உங்க உதவியாளர் நம்பர் எனக்கு வேண்டாம், உங்க சொந்த போன நம்பரைக் கொடுங்க” என்று எம்பியிடம் கேட்டு வாங்கினார். அத்துடன் நிற்காமல், “இருங்க சார், கால் வருதான்னு செக் பண்றேன்” எனக் கூறி, அங்கேயே எம்பிக்கு போன் போட்டு உறுதி செய்த சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அப்பெண்ணை சாதுரியமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும், எம்பியின் சொந்த எண்ணை வாங்கி நேரிலேயேDial செய்து சரிபார்த்த அந்தப் பெண்ணின் செயல், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பேசிய எம்பி மலையரசன், நிலுவையில் உள்ள திட்ட நிதிகளை முழுமையாகப் பயன்படுத்தவும், குறிப்பாகச் சுகாதாரத் துறைத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, அரசின் நலத்திட்டங்கள் குறித்துப் பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…
பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…
கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…