“ஓடும் காரில் ஆபாச வீடியோ பார்த்த பெண்…” அடுத்தடுத்து மோதிய 3 கார்கள்… திருமண நாள் கொண்டாடிய முதியவர் பலியான கொடூரம்… பெரும் சோகம்…!!

Spread the love

அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் உள்ள ஐ-15 நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் கார் ஓட்டும்போது கைப்பேசியில் ஆபாச வீடியோ பார்த்ததால், கட்டுப்பாட்டை இழந்து 3 கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி 66 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த கிறிஸ்டின் சாவோ (44) என்ற பெண் தனது நீல நிற எஸ்யூவி காரை ஓட்டிச் சென்றபோது, நெடுஞ்சாலையில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளால் போக்குவரத்து மெதுவாக நகர்ந்துள்ளது. அப்போது, வேகத்தைக் குறைக்கத் தவறிய சாவோ, முன்னால் சென்ற வெள்ளை நிற செடான் காரின் மீது பலமாக மோதியுள்ளார். மோதிய வேகத்தில் அந்த செடான் கார், அதற்கு முன்னால் இருந்த மற்றொரு எஸ்யூவி காரின் மீது மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் செடான் காரின் பின் இருக்கையில் இருந்த ஸ்காட் லாவர் லிச்ஃபீல்ட் (66) என்ற முதியவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு ஒரு நாள் முன்புதான் அவர் தனது மனைவியுடன் 39-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் வாரண்ட் மூலம் சாவோவின் செல்போனை ஆய்வு செய்தபோது, விபத்து நடப்பதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக அவர் ஆபாச இணையதளத்தைப் பார்த்துக் கொண்டே கார் ஓட்டிய அதிர்ச்சி உண்மை அம்பலமானது. இதையடுத்து அப்பெண் மீது வாகனக் கொலைக் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

2 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

2 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

2 மணத்தியாலங்கள் ago