கன்னத்தில் ஓங்கி “பளார்”… ஆத்திரத்தில் வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன்…! கணவருடன் சேர்ந்து தீர்த்து கட்டிய காதலி…. பயங்கர சம்பவம்…!!

Spread the love

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(50) தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சரவணன் குமார் என்ற மகனும், மீனா பிரியா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த 7 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனாரான வீரமுத்துவின் மனைவி லட்சுமியுடன்(45) ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். நேற்று ரமேஷ் குமார் லட்சுமியுடன் மாரியம்மன் கோவில் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த ரமேஷ் குமார் லட்சுமியின் கன்னத்தில் ஓங்கி அடித்தார். இதுகுறித்து லட்சுமி தனது கணவர் வீர முத்துவுடன் கூறியதும் வீரமுத்து அங்கு வந்து ரமேஷ் குமாரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் கோபம் தீராமல் ரமேஷ் குமார் வீரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது லட்சுமி தனது கணவருடன் சேர்ந்து ரமேஷ் குமாரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷ் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீரமுத்துவையும் லட்சுமியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

மகளிர் உரிமைத் தொகையில் அதிரடி மாற்றம்… ரூ. 1000 இனி ரூ. 1500 ஆக உயர்வு… CM எடுத்த அதிரடி முடிவு…!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கிய திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை புதிய…

8 minutes ago

“தந்தையின் மூல நோய் துயரம்… 3 வருஷ பைல்ஸ் கொடுமைக்கு ‘ஆபரேஷன்’ இல்லாத தீர்வு… ஒரு மகனின் உருக்கமான பதிவு”…!!!

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்கள் தந்தையின் மூல நோய்க்காக (Piles) அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி என அனைத்து வகையான மருத்துவ…

8 minutes ago

கையெழுத்து போடும் இடத்தில் நடந்த ‘அந்த’ சம்பவம்… வேலுமணி சந்திப்பு குறித்து செந்தில் பாலாஜி ஓபன் டாக்… அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், திமுக எதிர்க்கட்சியாகப்…

13 minutes ago

“அமைச்சர் பதவி காலி?”… வேலுமணி, சண்முகம் டீமுக்கு செங்கோட்டையன் வைத்த ‘செக்’… வெடித்த அரசியல் வெடிகுண்டு…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம்…

18 minutes ago

“பிள்ளைகளை விட எனக்குக் காதலன் தான் முக்கியம்”… கணவனை கொடூரமாகக் கொன்றுவிட்டுப் பெண் எழுதிய அந்த ஒரு கடிதம்.. சமூக வலைதளங்களை உலுக்கும் பரபரப்புச் சம்பவம்..!!

காதலனுடனான கள்ளத்தொடர்புக்குத் தடையாக இருந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, சமையலறையிலேயே பிணத்தைப் புதைத்துவிட்டு, அதன் மேலேயே சமையல் செய்து…

19 minutes ago

“நான் மட்டும் 2021-ல் நின்றிருந்தால்”…. தமிழக அரசியலை உலுக்கும் ரஜினியின் 100% அதிரடி வாக்குமூலம்… பரபரப்பு பேட்டி…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பெரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்…

24 minutes ago