பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (30). முடக்குவாதம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த இவர், தனது தந்தை செல்வராஜிடம் தமக்குரிய சொத்தை பிரித்து தருமாறு கோரியுள்ளார். ஆனால் தந்தை சொத்து பிரித்து தர மறுத்ததால், ஜெயராமனுக்கும் அவரது மனைவி காவ்யாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மனமுடைந்த தம்பதியினர், தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்துவிட்டு தாமும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
உறவினர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில், காவ்யா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியும், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் அக்டோபர் 1-ஆம் தேதியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர்களின் இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மகனுக்குத் தந்தை சொத்து பிரித்துத் தராததால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில், இளம் தம்பதியினர் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட ஒரு தலைமுறையே முழுமையாக அழிந்துபோன இந்தச் சோகச் சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…