சென்னையில் தந்தையுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 21 வயது ரவுடி ஒருவரை, மர்ம கும்பல் பட்டப்பகலில் தந்தையின் கண்முன்னே சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட கொடூர சம்பவம் தலைநகரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு ரவுடியான மைத்ரேயன் (21), கஞ்சா வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். பழிவாங்கும் பயத்தால் உறவினர் வீடுகளில் மாறி மாறித் தங்கியிருந்த அவர், அக்டோபர் 27 அன்று காலை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்தைப் போட்டுவிட்டுத் தந்தை வேணுகோபாலுடன் ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அடையார் இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே ஆட்டோ வந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கொடூரக் கும்பல் ஆட்டோவை வழிமறித்து, தந்தை கண் முன்னேயே மைத்ரேயனைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மைத்ரேயன் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலையைச் செய்துவிட்டு குற்றவாளிகள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட நிலையில், முந்தைய முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீவா மற்றும் அசாருதீன் ஆகிய இருவரும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அடையார் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…