தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ரேணுகா, தனது கணவர் அன்புமணி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைய மகன் தங்கபாலனுடன் வசித்து வந்தார். இவர்களது மூத்த மகன் சென்னையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கணவர் அன்புமணி குலதெய்வக் கோவிலுக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தாயும் இளைய மகனும் மட்டுமே இருந்துள்ளனர். அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாக, தங்கபாலன் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தனது தாய் ரேணுகாவின் தலையில் போட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தாயை, தங்கபாலன் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சென்னையில் உள்ள தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். அந்தப் புகைப்படத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த மூத்த மகன், உடனடியாக தனது தந்தை அன்புமணிக்குத் தகவல் தெரிவித்தார். பதறிப்போய் அவசரமாக வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, மனைவி ரேணுகா பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதைக் கண்டு தந்தை பேரதிர்ச்சி அடைந்தார்.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…
கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா ஆர்யபு மேர்லாவைச் சேர்ந்தவர் கார்த்திக் சுவர்ண மேர்லா (27). இவர் அப்பகுதி இந்து ஜாக்ரன்…
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…
ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…