அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்வதாக வெளியான தகவல்களை ஈரான் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ள எந்தவொரு தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையிலும் ஈரான் பங்கேற்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலமாக அமெரிக்கா முன்வைக்கும் 15 அம்ச கோரிக்கைகள் “நியாயமற்றவை” என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போரைத் தொடங்கியவர்கள் யார் என்பதை உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், ஈரானின் இறையாண்மையைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்க முடியாது என்றும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஈரானின் இந்த திடீர் மறுப்பு, பாகிஸ்தான் எடுத்து வந்த அமைதி முயற்சிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் தனது சொந்த முயற்சியால் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து சில கூட்டம் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது. ஆனால்ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் துப்பாக்கி சூடு வெடித்ததையடுத்து இந்த கூட்டம் அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…