தஞ்சாவூர் கரம்பை கிழக்குத் தெரு பகுதியில் விற்கும் ஐஸ்கிரீமை வாங்கிச் சாப்பிட்ட ஆறு வயது சிறுமியின் தொண்டையில் இரும்பு கம்பி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவியா என்ற அந்தச் சிறுமி, தெருவில் வந்த வண்டியில் ‘பட்டர் ஸ்காட்ச்’ ரக ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டபோது, தொண்டையில் ஏதோ உறுத்துவதை உணர்ந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பெற்றோர் சோதித்துப் பார்த்தபோது, சிறுமியின் தொண்டையில் துருப்பிடித்த சிறிய மெல்லிய இரும்பு கம்பி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அதனை மீட்டுள்ளனர். இதுகுறித்து ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான ‘பிஆர்எஸ்’ (BRS) உரிமையாளரிடம் பெற்றோர் முறையிட்டபோது, அவர் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த ஐஸ்கிரீம் உறையில் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி போன்ற எந்த விவரங்களும் இல்லாமல் வெறும் விலை மட்டும் அச்சிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் விற்பனையாளர் மீது தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுபோன்ற தரமற்ற நிறுவனங்கள் மீது முறையான ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…