அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில் ‘அல்ட்ரா வைட் பியூர் ஜிர் கர்மூஷா’ என்ற அரிதான தூய வெள்ளை நிற வல்லூறு பறவை 1.5 மில்லியன் யுஏஇ திரஹாமிற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.85 கோடிக்கு ஏலம் போயுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் மொக்லிச் பண்ணையால் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த பறவை , சுமார் 1 கிலோ எடையும் 16.5 அங்குல நீளமும் கொண்டது.
https://www.instagram.com/reel/DcojLFxMhOn/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
இதனிடையே, ஷைகா அல் மன்சூரி என்ற சிறுமி தனது மாமாவுடன் இந்த ஏலக் கண்காட்சியில் கலந்துகொண்ட வீடியோ வைரலானது. அதில், தான் பறவை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதற்குத் தனது மாமாவே காரணம் எனக் கூறியிருந்தார். அந்த அரிய வெள்ளை வல்லூறை அச்சிறுமிக்காகவே அவரது மாமா வாங்கிக் கொடுத்ததாக இணையத்தில் தகவல்கள் பரவியபோதிலும், அதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…