“நீங்க திருந்தலனா திருத்துவோம்”…. கொழுந்துவிட்டு எரியும் மிசா சர்ச்சை…. CM விஜய்க்கு எதிராக கொந்தளித்த ஆ.ராசா….!

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்து விமர்சித்துப் பேசியது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், அப்போதைய காலகட்டத்தில் பிற குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களைப் போலத்தான் அவரும் கைது செய்யப்பட்டார் என்றும் நிர்மல் குமார் பேசியது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த பேச்சுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரை தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆ.ராசாவின் இந்த எல்லை மீறிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குத் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதனிடையே, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழியும், “யாகாவா ராயினும் நாகாக்கா காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி, சொந்தக் கட்சியினரின் நாகரிகமற்ற பேச்சை மறைமுகமாகக் கண்டித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

கனிமொழியின் அறிவுறுத்தல் மற்றும் அரசியல் தலைவர்களின் கண்டனங்களைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கமளித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் அடையாளத்தையும் உண்மையையும் திட்டமிட்டு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ஏளனம் செய்ததால் ஏற்பட்ட வலியை உணர்த்தவே, ஏளனம் செய்தவரின் அடையாளத்தை உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு பேசியதில் தனக்கும் வருத்தம் தான் என்றும், தான் பேசிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தயக்கமும் இல்லை என்றும் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது பதிவின் இறுதியில் “நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளது, தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் உற்றுநோக்கத்தக்க விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

4 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

5 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

5 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

5 மணத்தியாலங்கள் ago