Categories: சினிமா

‘நீங்க தான் எங்களோட பலம்’… நயன்தாராவின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பாசத்தை கொட்டிய மருமகன் விக்கி..

Spread the love

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன் பிறகு காதலில் சிக்கிய இவர் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து வந்தார்.

இதனிடையே இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சுமார் ஏழு ஆண்டுகள் காதல் ஜோடியாக கோலிவுட் திரை உலகில் வலம் வந்தனர். அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினார்.திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறிய தகவலையும் வெளியிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தற்பொழுது  இருவரும் தங்களது குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களது குடும்பத்தில் கொண்டாடப்படும் அழகிய கொண்டாட்டங்கள் குறித்த பல புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அத்தையும், நயன்தாராவின் அம்மாவுமான ஓமனா குரியனுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவானது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

ஐயோ… காட்டு வழியில் 12 வயது சிறுமியைக் கடத்தி வன்கொடுமை… போலீஸ் விரட்டியதில் கால் உடைந்து… சிக்கிய 26 வயது வாலிபர்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…

6 minutes ago

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… மகளிர் உரிமைத் தொகை நாளை வர வாய்ப்பு…!

மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…

9 minutes ago

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

44 minutes ago

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

48 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

55 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

60 minutes ago