தமிழ்நாட்டில் அதிவேகமாக பரவும் புதிய ஆபத்து! 3,000+ பேர் பாதிப்பு… உங்களுக்கும் இந்த அறிகுறி இருக்கா?…. உச்சக்கட்ட அலெர்ட்…!

Spread the love

தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ‘ஸ்கிரப் டைபஸ்’ (Scrub Typhus) எனப்படும் உண்ணிக் காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ரிக்கட்ஸியா’ (Rickettsia) வகையைச் சேர்ந்த பாக்டீரியாத் தொற்றைக் கொண்ட நுண் ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகள் மனிதர்களைக் கடிப்பதன் மூலமே இந்த அபாயகரமான காய்ச்சல் பரவுகிறது.

உண்ணி கடித்த இடத்தில் சிறிய சிவப்புத் தடிப்போ அல்லது கருநிற வடுவோ தோன்றுவது இதன் முக்கிய அடையாளமாகும். இதனுடன் கடுமையான தலைவலி, குளிருடன் கூடிய காய்ச்சல், உடல் வலி, தோல் அரிப்பு, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளும் வெளிப்படும். இந்நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறாவிட்டால், கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு உள்ளுறுப்புகள் செயலிழப்பதுடன், கோமா மற்றும் உயிரிழப்பு போன்ற தீவிர ஆபத்துகளும் நேரிடக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, பொதுமக்கள் தங்களைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, குடியிருப்புப் பகுதிகளைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும் பூங்காக்களுக்குச் செல்லும்போது பூச்சிக் கடியிலிருந்து தப்பிக்க உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவது அவசியமாகும். காய்ச்சல் அல்லது தோல் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago