மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே சிஹோனியாவில் அமைந்துள்ள கக்கன்மாத் சிவன் கோவில், பேய்களால் கட்டப்பட்டதாக நம்பப்படும் ஒரு மர்மமான வரலாற்றுத் தலமாகும். 11-ஆம் நூற்றாண்டில் கச்சபகத வம்ச மன்னன் கீர்த்திராஜாவின் மனைவி ககன்வதிக்காக இந்த ஆலயம் கட்டப்பட்டதாக ஒரு வரலாற்றுச் சான்று இருந்தாலும், உள்ளூர் மக்களிடையே வேறு சில சுவாரசியமான கதைகளும் உலவுகின்றன. ஒரே இரவில் இந்த பிரம்மாண்ட கோவிலைக் கட்டி முடிக்குமாறு சிவபெருமான் பேய்களுக்கு உத்தரவிட்டதாகவும், விடியற்காலையில் கோழி கூவியதால் பயந்துபோன பேய்கள், பணியை அரைகுறையாக அப்படியே போட்டுவிட்டு மறைந்ததாகவும் இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
தரையிலிருந்து சுமார் 115 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் இந்த கோவிலின் கட்டுமான முறை, நவீன விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக கட்டிடங்கள் கட்டப்படும்போது பயன்படுத்தப்படும் சிமெண்ட், சுண்ணாம்பு அல்லது எந்தவொரு கலவையும் இல்லாமல், வெறும் கற்களை மட்டுமே ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி இந்த ஆலயம் விசித்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள பிற கட்டிடங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்ட நிலையிலும், எந்தவித கலவையுமின்றி கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் மட்டும் பல நூறு ஆண்டுகளைக் கடந்து, இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கங்களைத் தாங்கி இன்றும் உடையாமல் அப்படியே நிற்பது ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரும் புதிராகவே உள்ளது.
சுமார் 120 அடி நீளமுள்ள இக்கோவிலின் மையப்பகுதியில் ஒரு பிரம்மாண்டமான சிவலிங்கம் அமைந்துள்ளதுடன், இதன் மேற்பகுதியும் கருவறையும் பல நூற்றாண்டுகளாகச் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கின்றன. யாராலும் விவரிக்க முடியாத ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்ய சக்திதான் இந்த விசித்திரமான கோவிலை இன்றுவரை பாதுகாத்து வருவதாக உள்ளூர் மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். இந்த மர்மக் கோவிலைக் காண்பதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகக் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆட்டோ கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு, மாரடைப்பு மரணமாகக் கருதப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின் கொலை வழக்காக…
மகாராஷ்டிராவின் கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஹாலா தாலுகாவிற்குட்பட்ட சாத்வே கிராமத்தில் விசித்திரமான திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசிக்கும்…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…