#image_title
நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் உணவு பயிர்கள் உணவு சார்ந்தவைகள் எல்லாமே ரசாயனம் கலக்காமல் மிகவும் தரமானதாக ஆர்கானிக் உணவுகளாக இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாமே ரசாயனம் தான் எந்த உணவு எடுத்தாலும் ரசாயனமில்லாமல் இருப்பதில்லை.
அதுமட்டுமல்லாமல் ஃபாஸ்ட் ஃபுட் மோகமும் மக்களிடையே அதிகமாக இருக்கிறது. இந்த ரசாயனம் கலந்த உணவுப் பொருட்களாலும் உடலுக்கு பல தீங்கு விளைவிப்பதுடன் உடல் பருமன் நீரழிவு போன்ற நோய்கள் சர்வ சாதாரணமாக பெரும்பாலான மக்களுக்கு இருந்து வருகிறது. இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் யாருமே உடல் நலனில் அக்கறை கொள்ள நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் விளைவாக இளம் வயதிலேயே பலவித நோய்கள், இளம் வயதில் மாரடைப்பு அளவுக்கு அதிகமான உடல் பருமன் போன்றவைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். உடலை கட்டுமஸ்தாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்வதற்கு சரியான உணவு முறைகளையும் சரியான வாழ்க்கை முறையையும் பின்பற்றுபவர் வெகு சிலரே. அதில் சரியாக எல்லாவற்றிலும் பின்பற்றி இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் ஒரு 56 வயது மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அவர்தான் சிங்கப்பூரை சேர்ந்த மாடல் சுஆடன் டன் ஆவார். இவரது வயது 56 ஆனால் இவரின் தோற்றத்தை பார்த்தால் 20 வயது இளைஞன் போலவே இருப்பார். அதற்கு காரணம் இவரது முறையான வாழ்க்கை முறை மற்றும் டயட் தான் காரணமாம்.
தனது கட்டு மஸ்தான உடலை இளம் வயதிலிருந்து தக்க வைத்துக் கொள்ள பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வாராம். தினமும் கட்டாயம் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வாராம். அரிசி சாப்பாட்டை பெரும்பாலும் தவிர்த்து விடுவாராம். இதற்கும் அதிகபட்சமாக இவரிடம் மது புகைப்பழக்கம் கிடையவே கிடையாதாம். இவரை பார்ப்பவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் தான் செல்வர். அப்படி 20 வயது இளைஞனுக்கும் டப் கொடுக்கும் வகையிலே இருக்கிறார் 56 வயதான சுஆடன் டன்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…
கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…
டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…