மத்ரா மாவட்டம் பிருந்தாவனத்தில் ஆன்மீகப் போர்வையில் வலம் வந்த ஹிம்மத் கிரி ஹேமந்த் ராஜ் என்ற போலி சாது, பெண்களைத் தன் வலையில் வீழ்த்தி சீரழித்து வந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்மீகம் பேசுவது போல நடித்து நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய இவர், முக்கியமாக ஆதரவற்ற கணவனை இழந்த பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களைக் குறிவைத்து, தனது இனிமையான பேச்சால் மயக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களைத் தன் பிடியிலேயே வைத்திருக்க, அவர்களிடம் தவறாக நடந்துகொண்டதை ஆபாச வீடியோவாகப் பதிவு செய்து, அதைக் காட்டி தொடர்ந்து மிரட்டியும் துன்புறுத்தியும் வந்துள்ளார். இந்த மிருகத்தனமான அத்துமீறல்களையும் மன உளைச்சலையும் பொறுத்துக்கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர், ஒன்றிணைந்து அவரைப் பிடிக்கத் திட்டம் தீட்டினர். அதன்படி, பிருந்தாவனத்தில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் அவர் தங்கியிருந்தபோது கையும் களவுமாகப் பிடித்தனர்.
https://twitter.com/pulsenewsbreak/status/2102664161268281352/video/1
விடுதியிலிருந்து அவரை வெளியே இழுத்து வந்த பெண்கள், ஆத்திரமடைந்து அவரைச் செருப்புகளாலும் கம்புகளாலும் சரமாரியாகத் தாக்கி தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். நடுரோட்டில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் திரண்ட நிலையில், தகவலறிந்து வந்த காவல் துறையினர் அந்தப் போலி சாது மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் கைது செய்து காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…