கம்போடியாவின் புனோம் பென்னில் ஒரு சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர் வெற்றிகரமாக அகற்றிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி, சிறுவனுக்கு தொடர்ந்து காது வலி மற்றும் சத்தம் கேட்டதாக புகார் அளித்ததையடுத்து, உள்ளூர் மருத்துவமனைக்கு விரைந்தபோது அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
View this post on Instagram
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, மருத்துவர் ஆரம்பத்தில் ஒரு சிறிய காது தொற்று இருப்பதாக சந்தேகித்தார். ஆனால் பரிசோதனையில் குழந்தையின் காது கால்வாயில் ஒரு கரப்பான் பூச்சி ஆழமாக ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பூச்சி உயிருடன் இருந்தது, நகர்ந்தது, இது பிரித்தெடுக்கும் செயல்முறையை மிகவும் சவாலானதாக மாற்றியது.
