“தவெக-வில் இருந்து அதிமுக-வுக்கு… 500 நிர்வாகிகளுடன் தாவிய முக்கிய புள்ளி… விஜய் தலையில் பேரிடியை இறக்கிய எடப்பாடி….!

Spread the love

தென்மாவட்டங்களை மீண்டும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றும் முனைப்பில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த தேர்தல்களில் நழுவிய தொகுதிகளைக் கைப்பற்ற பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக நிகழ்த்தியுள்ள இந்த அதிரடி அரசியல் மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில், விளாத்திகுளம் தொகுதி தவெக பொறுப்பாளர் பிரவீன்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இந்தச் சேர்க்கை, தென்மண்டலத்தில் அதிமுகவின் அடிமட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

அரசியலில் தடம் பதிக்கத் துடிக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சூழலில், இந்தத் திடீர் விலகல் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. தனது முதல் அரசியல் பயணத்தைத் தொடங்கும் முன்பே, முக்கிய நிர்வாகிகள் மாற்றுக்கட்சியை நோக்கிச் செல்வது விஜய்க்கு ஒரு சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், அதிமுகவின் இந்த “ஆபரேஷன் தெற்கு” மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளையும் தன் பக்கம் இழுக்கத் திட்டமிட்டுள்ளதால், எதிர்வரும் தேர்தல் களம் தென்மாவட்டங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

6 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

6 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

7 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

7 மணத்தியாலங்கள் ago