பல பெண்களை மயக்கிய ரீல்ஸ் மன்னன்… மொபைலை நோண்டிய மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… இறுதியில் நடந்த பயங்கரம்…!!

Spread the love

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளியான சிவாவுக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக சிவாவுக்கு பெங்களூருவைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுடன் சிவா தனிமையில் இருந்த புகைப்படங்களை வெண்ணிலா பார்த்ததால் தம்பதிக்குள் கடும் மோதல் வெடித்தது. இதனால் விரக்தியடைந்த வெண்ணிலா, கடந்த ஒரு மாதமாக தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

தாய் வீட்டில் வசித்து வந்த மனைவியை மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சிவா பலமுறை அழைத்தும் வெண்ணிலா அதனை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று வியாசர்பாடியில் உள்ள வெண்ணிலாவின் அக்கா வீட்டிற்குச் சென்ற சிவா, மனைவியிடம் தனியாகப் பேச வேண்டும் எனக்கூறி ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கும் வெண்ணிலா சேர்ந்து வாழ மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சிவா தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.

இக்கொடூர சம்பவம் குறித்து எம்.கே.பி. நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். தலைமறைவான சிவா, மகாராஷ்டிராவில் இருந்தபடி ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று தனது நண்பரை செல்போனில் தொடர்புகொண்டு குழந்தைகளைப் பார்க்க ஊருக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ரகசியத் தகவலை வைத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போலீசார், வியாசர்பாடி பகுதியில் பதுங்கியிருந்த சிவாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தகாத உறவுக்கு தடையாக இருந்த மனைவியை கணவனே தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

6 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

10 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

30 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

33 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

42 minutes ago