#image_title
2020 ஆம் ஆண்டு யாராலும் மறக்க முடியாது. கொரோனா என்ற கொடிய நோய் வந்து உலகை ஆட்டிப்படைத்து பல லட்சக்கணக்கான மக்கள்களின் உயிரை வாங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஆரம்ப புள்ளி என்று பார்த்தால் சீனா தான். சீனாவில் இருந்து வந்தது தான் இந்த கொரோனா வைரஸ். 2020ல் இந்த தாக்கம் முடிந்துவிட்டது என்று எல்லோரும் சற்று இளைப்பாரிய நேரத்தில் மறுபடியும் 2021 ஆம் ஆண்டு மீண்டும் கொரோனா தலை தூக்கியது.
2021 ஆம் ஆண்டும் ஒரு சில மாதங்கள் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். தற்போது மறுபடியும் சீனா மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறது. அது என்னவென்றால் தற்போது HMPV என்ற வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதாகவும் இந்த தாக்கத்தினால் மக்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
சீனாவை தாக்கி இருக்கும் இந்த HMPV வைரஸ் நோயினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள் பல இடங்களில் தகனம் செய்வதற்க்கு இடம் இல்லாமல் கூட பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையை பார்க்கும் போது அனைவரும் கொரோனா காலகட்டத்தின் தீவிரத்தை ஞாபகப்படுத்துவதாக கூறுகின்றனர். இந்த HMPV வைரஸ் என்பதற்கு Human Meta Pneumo Virus என்பதன் தான் முழு அர்த்தம் ஆகும். இந்த வைரஸ் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.
இந்த வைரஸ் ஆனது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்ற குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. கொரோனா போன்ற கொடிய வைரஸை விட இது ஆபத்து குறைவானது தான் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது பரவும் வேகத்தை பார்க்கும் போது உலக நாடுகள் எல்லாம் அச்சம் அடைய தொடங்கி இருக்கிறது.
இந்த வைரஸ்க்கு குறிப்பிட்ட தடுப்பூசி, மருந்து எதுவும் இல்லை என்பதால் சீன அரசாங்கம் இந்த நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை மட்டுமே அளித்து வருகின்றது. மருத்துவமனைகள் நிரம்பி இருப்பதால் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலை போல இது மாறிவிடக்கூடாது என்று அனைவரும் இறைவனிடம் பிரார்த்தித்து வருகிறார்கள். உலக நாடுகளின் விருப்பமும் அதுவாக தான் இருக்கிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…