மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போர் நடவடிக்கைகள், உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, உலக எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து உலக நாடுகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போரை நிறுத்திவிட்டு ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தரப்பில் அதிபர் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரான் பிரதிநிதிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தையில் சில முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஐந்து நாட்களுக்குள் இரு தரப்புக்கும் சாதகமான ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் அமெரிக்காவுடன் நேரடித் தொடர்புகள் ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ளதால், இந்த ராஜதந்திர நகர்வுகளில் ஒருவித முரண்பட்ட தகவல்களும் நிலவி வருகின்றன.
முன்னதாக ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால், அவ்வாறு தாக்கினால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள், இஸ்ரேலிய மின் நிலையங்கள் மற்றும் அரபு நாடுகளின் கடல் நீரை குடிநீராக்கும் முக்கிய மையங்களைச் சிதைப்போம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையினால் அமெரிக்கா தற்போது பின்வாங்கியுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் நடந்தால் வளைகுடா நாடுகள் மீள முடியாத பாதிப்புகளைச் சந்திக்கும் என்பதால், ராணுவ நடவடிக்கைகளை விடப் பேச்சுவார்த்தையே சிறந்தது என்ற முடிவுக்குப் வல்லரசு நாடுகள் வந்துள்ளன.
இந்த ஒட்டுமொத்தப் பதற்றத்திற்கும் மையப்புள்ளியாக இருப்பது ஹார்முஸ் ஜலசந்தி ஆகும். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இப்பாதை வழியாகவே நடைபெறுகிறது. போர் காரணமாக அமெரிக்க நட்பு நாடுகளின் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் விரைவில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும், அதன் மூலம் உலக நாடுகளின் எரிசக்தித் தேவை சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…