கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேட் ஜாங்க்ஸ் என்ற பெண், தனது வளர்ப்புத் தந்தையான தாமஸ் மெர்ரிமனின் மடிக்கணினியைப் பயன்படுத்திய போது, அதில் தனது ஆபாசப் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தார். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவர், 2020-ம் ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, தனது தந்தைக்கு அதிகப்படியான தூக்க மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகளைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். அதன் பின்னர், பிளாஸ்டிக் பை ஒன்றைப் பயன்படுத்தி அவரை மூச்சுத் திணறடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலையைச் செய்த சமயத்தில், ஜாங்க்ஸ் தனது நீண்டகால நண்பரான ஆடம் சிப்லியாக் என்பவருக்கு சில குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். அதில், தனது தந்தைக்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுத்துவிட்டதாகவும், அவர் கண்விழித்தால் தலையில் பலமாகத் தாக்கப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், கொலையை நண்பனிடம் ஒப்புக் கொண்ட ஜாங்க்ஸ், தனது வாகனத்தில் உள்ள சடலத்தை மறைக்க உதவுமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்த ஆடம், மறுநாள் காலையில் காவல் துறையினருக்கு முழுத் தகவலையும் தெரிவித்துவிட்டார்.
போலீசாரின் விசாரணையில், தாமஸ் மெர்ரிமனின் உடல் அவரது வாகன நிறுத்துமிடத்தில் குப்பைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாங்க்ஸ் தரப்பில் அவர் தனது வளர்ப்புத் தந்தையை மிகவும் நேசித்ததாக வாதிடப்பட்டது. இருப்பினும், அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் 2023-ம் ஆண்டு நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரது சிறைத் தண்டனையை மீண்டும் உறுதி செய்தது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விசிக முகாம் செயலாளர் இளையராஜா (39), கடந்த ஆகஸ்ட்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…
கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…