பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் பிரபல லவ்லி புரொஃபெஷனல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் துப்பாக்கிகள், கைப்பெடிகுண்டுகள் மற்றும் கூர்மையான கத்திகளுடன் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென அத்துமீறிச் சண்டையிட்டுப் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் அங்குப் படிக்கும் மாணவர்கள் அல்ல என்றும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குச் சொந்தமான ரவுடி கும்பல் மற்றும் கூலிப்படையினர் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த கொடூர ஊடுருவலால் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருக்கும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகப் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்.பி.யு பல்கலைக்கழகத்தின் நிறுவனரான அசோக் மிட்டல் பாஜகவில் இணைந்த நிலையில், இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னால் தீவிர அரசியல் கோணமும் சதியும் இருப்பதாக வலுவான சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்தில் உச்சக்கட்ட பீதியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாகப் போலிஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அத்துமீறி நுழைந்த ஆயுதமேந்திய கும்பலைத் தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…