அடடே… விஜய் மாஸ் ஆக்சன்… பின்னணியில் சிங்கப்பெண் படை… சத்தமின்றி நடந்த தரமான சம்பவம்…!!

Spread the love

தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, கடந்த ஒரு வாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இச்சிறப்புப் படை பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, அவசர கால புகார்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்வது என குறுகிய காலத்தில் மக்களிடம் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த ஏழு நாட்களில் மட்டும் பெறப்பட்ட 346 புகார்களுக்குச் சிங்கப்பெண் படை விரைவாகத் தீர்வு கண்டுள்ளது. இதில் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலவிய 28 வழக்குகளில் முறையான குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளிலும் இச்சிறப்புப் படை தீவிரம் காட்டியுள்ளது. உள்ளூர் காவல் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு, காணாமல் போன 14 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் என மொத்தம் 20 பேரை மீட்பதோடு, அவர்களை மீண்டும் தங்களது குடும்பங்களுடன் சேர்த்து மகிழ்ச்சியை மீட்டுத் தந்துள்ளது. மேலும், கல்வி பாதியில் விடுபட்ட சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட்டு, பள்ளி இடைநின்ற 51 சிறுவர், சிறுமிகளை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்து சாதனை படைத்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அடித்தட்டு வரை கொண்டு செல்லும் நோக்கில், ஒரே வாரத்தில் 3,580 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், தொழிற்பேட்டைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் குடியிருப்புகள் எனப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்நிகழ்வுகள் அமைக்கப்பட்டன. மாணவர்களுக்குச் சட்ட உரிமைகள், டிஜிட்டல் பாதுகாப்பு, அவசரகால உதவி எண்கள் குறித்தும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மொழி தடைகளைக் கடந்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இத்தகைய தீவிர நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழல் தொடர்ந்து உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Swetha

Recent Posts

அட்ரா… கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்தால்… 4 மணி நேர அதிவேக டெலிவரி… யாருக்கெல்லாம் கிடைக்கும்?… இந்தியன் ஆயிலின் மாஸ் அறிவிப்பு…!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து ஒரு…

8 minutes ago

“டேய்… என்னடா ஷாட் இது?… மைதானத்தை விட்டு வெளியே பறந்த பந்து… வைபவ் சூர்யவன்ஷியின் அசுர ஆட்டம்… மிரண்டுபோன ஜிம்பாப்வே…!”

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.…

23 minutes ago

“அட கடவுளே… எப்ப பார்த்தாலும் போன் ஏன் பிஸி?… சந்தேகத்தால் சீரழிந்த வாழ்க்கை… 3 பிஞ்சு சிறுமிகளைத் தவிக்கவிட்டு… தாயைக் கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்…!”

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 24 வயதான ரெபேக்கா என்பவருக்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாகப்பிரகாஷ்…

32 minutes ago

அடடா… ஐடி பிரியர்களுக்கு ஜாக்பாட்… TCS-ல் செம வேலைவாய்ப்பு… இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க…!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பெங்களூரில் உள்ள தனது மையத்திற்காக 'React JS with Python' தொழில்நுட்பங்களில் அனுபவம் கொண்ட…

46 minutes ago

அதிமுகவிற்கு எடப்பாடி வைத்த செக்?…. சபாநாயகர் முன் நேருக்கு நேர் மோதப் போகும் இபிஎஸ் – 4 எம்எல்ஏக்கள்…. ஜூலை 30-ல் வெடிக்கப் போகும் குண்டு….!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில்…

57 minutes ago

ஸ்டாலின் டீமுக்கு ‘ரெட் கார்டு’…. செம ஸ்கெட்ச் போட்டு 2 அமைச்சர்களை இறக்கிய முதல்வர் விஜய்…. தமிழக அரசில் அதிரடி மாற்றம்….!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அண்மையில் பதவியேற்றுள்ள நிலையில், பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணையங்களுக்கான புதிய…

1 மணத்தியாலம் ago