பிரபலங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக, திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பொது இடங்களுக்குச் செல்லும்போது ரசிகர்களின் அதீத அன்பால் பல அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகிறது. அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பது, அத்துமீறி தொடுவது போன்ற செயல்களால் அவர்கள் அடிக்கடி தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான நிகிதா ராவலுக்கு சினிமா விழா ஒன்றில் நேர்ந்த எதிர்பாராத சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிகிதா, பத்திரிகையாளர்களின் கேமராக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ரசிகை ஒருவர், நடிகையுடன் செல்ஃபி எடுக்க அணுகியுள்ளார். பெண்தானே என்று நினைத்து நிகிதாவும் எந்த மறுப்பும் இன்றி சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், புகைப்படம் எடுக்கும் சாக்கில் நடிகையின் கன்னத்தில் முத்தமிட்ட அந்தப் பெண், திடீரென நிகிதாவின் உதட்டிலும் முத்தமிட்டு, உதட்டைக் கடித்து அத்துமீறியுள்ளார். இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த நடிகை எவ்வளவோ முயன்றும் அந்த ரசிகையை தன்னை விட்டு விலக்க முடியவில்லை. இறுதியில், சுற்றியிருந்தவர்கள் உடனடியாகத் தலையிட்டு அந்தப் பெண்ணை அப்புறப்படுத்தினர்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு, கடும் தர்மசங்கடத்திற்கு ஆளான நிகிதா, உடனடியாக தனது உதட்டை கையால் மறைத்தவாறு கேமராக்களில் இருந்து விலகி வேகமாகச் சென்றார். நடிகைகளிடம் ஆண் ரசிகர்கள் வரம்பு மீறி நடக்கும் பல செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்; ஆனால் ஒரு பெண் ரசிகையே பொது இடத்தில் கேமராக்களுக்கு முன்னால் இப்படி அத்துமீறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், ரசிகர்களாக இருந்தாலும் பிரபலங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் எல்லைகளுக்கும் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும் எனத் தங்கள் கண்டனங்களையும் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…