புரட்சி கழகம் அமைப்பின் மாநில தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை நடுரோட்டில் வைத்து 2 / 3 மர்ம நபர்கள் தாக்கிய நிகழ்வு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிர்வாகியான கும்பகோணம் மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த ஸ்டாலினை மர்மன் நபர்கள் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கும்பகோணம் மாவட்டம் ஆடுதுறையில் பதற்றமான நிலை இன்னும் நீடித்து வருகிறது. மேலும் அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக பாமகவினர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக புரட்சித் தமிழக அமைப்பின் மாநில தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தியும் வந்துள்ளார். பாமகவினர் வருகைக்காக காத்திருந்த பொழுது, அப்பகுதியில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சிகளை சேர்ந்த மர்ம நபர்கள், புரட்சி தமிழக அமைப்பின் மாநில தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை பார்த்து, “எப்படி எங்கள் தலைவர் திருமாவளவரை விமர்சித்து பேசலாம்?” என்று கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து இருதரப்பிற்கும் வாக்குவாதம் அதிகரித்து, மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தியை கடுமையாக தாக்கத் தொடங்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மர்ம நபர்கள், தனது காலில் இருந்த செருப்பால் ஏர்போர்ட் மூர்த்தியை அடிக்க முயன்றனர். இதனால் அவரின் சட்டை கிழிந்து தொங்கியது. மேலும் இந்த சம்பவத்தை பார்த்த அருகில் இருந்த போலீசார், இரு தரப்பினரையும் தடுக்கும் முயன்றனர். அப்பொழுது விசிக மர்ம நபர்கள் தான் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடினர். மேலும் டிஜிபி அலுவலகம் அருகே நடுரோட்டில் நடைபெற்ற இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…