மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (MCL) நிறுவனத்தில் மொத்தம் 667 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஜூனியர் ஓவர்மேன் பதவிக்கு 192 இடங்களும், மைனிங் சிர்தார் பதவிக்கு 448 இடங்களும், சர்வேயர் பணிக்கு 24 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர மொழிபெயர்ப்பாளர் மற்றும் பேத்தாலஜி டெக்னீஷியன் பணிகளுக்கும் இடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, ஜூனியர் ஓவர்மேன் மற்றும் மைனிங் சிர்தார் பணிகளுக்கு மைனிங் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சர்வேயர் பணிக்கு மைனிங் அல்லது மைன் சர்வேயிங் துறையில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர் பணிக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பாடங்களுடன் பி.ஏ (B.A) பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும். இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 41,966 முதல் ரூ. 51,103 வரை ஊதியம் வழங்கப்படும். அத்துடன் DA, HRA போன்ற இதர சலுகைகளும் உண்டு.
விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவு, EWS மற்றும் OBC பிரிவினர் ரூ. 1180 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு (CBT), நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய மூன்று நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்; இதில் தொழில்நுட்பப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். முக்கியமாக, இந்தத் தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது.
விருப்பமுள்ளவர்கள் www.mahanadicoal.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது கல்விச் சான்றிதழ்கள், வயதுச் சான்று மற்றும் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 2026, ஏப்ரல் 06 இரவு 11:50 மணி வரை ஆகும். காலக்கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ளதால், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…